நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கி வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு UPI QR Cash வசதியை பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஏடிஎம் மையங்களில் ஒரு க்யூ ஆர் கோடு உருவாக்கப்படும். அதில் உங்களது மொபைல் அப்ளிகேஷனை கொண்டு ஸ்கேன் செய்து பணம் பெற்றுக் கொள்ளலாம். அதோடு yono அப்ளிகேஷன்னையும் எஸ்பிஐ வங்கி புதுப்பித்துள்ளது