X வலைதளத்தில் வெளியான காணொளி ஒரு நபரின் எளிமையான மற்றும் திறமையான கண்டுபிடிப்பை வைரலாக்கி உள்ளது. அந்த காணொளியில், நபர் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் மரக்கட்டை வைத்து எலிப்பொறி ஒன்றை தயார் செய்துள்ளார். அவர் தயார் செய்திருக்கும் இந்த பொறியின் மூலமாக எலி உள்ளே சென்று எளிதில் சிக்கிக் கொள்ளும். ஆனால், வெளியில் வர வாய்ப்பு இல்லை. இந்த காணொளி வைரலான நிலையில், பலரும் அவரது கண்டுபிடிப்பை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
हमारे यहाँ लोग बोतल से चूहा पकड़ लेते हैं,
और बाहर वाले AI से rat detect कर रहे हैं 😅 pic.twitter.com/jeFW3BPssb— Rolex 🕉️ (@RolexRuler) October 14, 2025
இந்த கண்டுபிடிப்பு மிகவும் எளிமையான மற்றும் பொதுவாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டிருப்பதால், பலரும் அதை பயன்படுத்தி எளிதாக எலிகளை பிடிக்க முடியும் என்று நம்புகின்றனர். இது செலவு குறைவாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதால், பலர் இந்த முறையை பரவலாக பயன்படுத்தலாம் என்று கருதுகின்றனர். இந்த காணொளி பலருக்கும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
