
இந்தி நடிகையான அலியாபட் அண்மையில் வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் கேமரா வாயிலாக ரகசியமாக படம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மீது அலியாபட் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் நடிகர்-நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பலரும் இதனை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராஷிகன்னா இதுகுறித்து கூறியதாவது “ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது.
இதனிடையே சில விஷயங்களை பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். அதனை அனைவரும் கவுரவப்படுத்த வேண்டும். அலியாபட் போன்ற நடிகைகளை பார்த்தால் கண்டிப்பாக போட்டோ எடுத்துக்கொள்ள தோன்றும். எனினும் அதற்கு ஒரு எல்லை உள்ளது. இவ்விஷயத்தில் யாராக இருந்தாலும் ஒன்றுதான். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு புது சட்டங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது” என்று கூறினார்.