அப்துல் கலாமின் தேசப்பற்று வெறும் வார்த்தைகளில் இல்லை, அவரது ஒவ்வொரு செயலிலும் இருந்தது என்பதற்கு உதாரணமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கண்பார்வை அற்ற ஒரு நபர் பேருந்தில் பயணம் செய்தபோது, அவர் பிடித்துக்கொண்டிருந்த கைப்பிடி (Handle) தளர்வாக இருப்பதை உணர்ந்துள்ளார். உடனே சாதாரணமாக இருந்துவிடாமல், தனது பையிலிருந்த ஸ்க்ரூடிரைவரை எடுத்து அந்தப் பேருந்தின் கைப்பிடியைச் சரிசெய்து அசத்தியுள்ளார். அரசு சொத்துக்களைத் தனது சொந்தச் சொத்தாகக் கருதி அவர் செய்த இந்தச் செயல், “நாம் வெறும் டிக்கெட் வாங்குவதோடு நமது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறோம், ஆனால் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் எத்தனை பேர் அக்கறை காட்டுகிறோம்?” என்ற ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளது.

“>

 

இவர்  போன்றோரின் இந்தச் செயல், பொறுப்புள்ள குடிமகனாக நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.