மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கலம்போலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் புகுந்து வாசலில் இருந்த காலணி ஸ்டாண்டைத் திறந்து விலை உயர்ந்த காலணிகளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பின் பாதுகாப்பு வளையத்தையும் மீறி உள்ளே நுழைந்த அந்தத் திருடன், ஒவ்வொரு வீட்டின் வாசலாகச் சென்று நோட்டமிட்டுள்ளார். பின்னர் ஒரு வீட்டின் வெளியே இருந்த ஷூ ராக்கை (Shoe Rack) லாவகமாகத் திறந்து, அதில் இருந்த பிராண்டட் ஷூக்களை மட்டும் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்துள்ளார்.
காலையில் எழுந்து பார்த்த உரிமையாளர் தனது காலணிகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருடனின் கைவரிசை அம்பலமானது.
A thief entered a residential society in Kalamboli, opened a resident’s shoe rack outside their door, and stole their shoes😭 pic.twitter.com/8IpS3zFqlo
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 25, 2026
“>
இந்த நூதனத் திருட்டுச் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
