இந்தியாவில் கடந்த ஆண்டு சிலிண்டர் விலை சாமானிய மக்களை பெரிதும் பாதித்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதன் விலையை குறைக்க வேண்டும் என பல தரப்பினரும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அண்மையில் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்தது. இதனால் தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வரவிருக்கும் புத்தாண்டு பண்டிகை மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு சிலிண்டர் விலையை அரசு மேலும் குறைக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நூறு ரூபாய் வரை சிலிண்டர் விலை குறையும் எனவும் இதனால் எல்பிஜி சிலிண்டர் விலை 800 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நான்கு முதல் ஐந்து ரூபாய் வரை குறைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.