வயதானவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றின் பலன்களை பெறுவதற்கு குடும்பத்தில் யாராவது பெரியவர்கள் இருந்தால் இந்த திட்டங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதன்படி பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா என்ற பென்ஷன் திட்டத்தை மத்திய அரசான செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாதம் 3000 பென்ஷன் வழங்கப்படுகிறது. எந்த வேலையும் இல்லாமல் இருந்து பென்ஷன் பெற விரும்பினால் இது உதவியாக இருக்கும். இந்த திட்டத்தில் சேருவதற்கு நீங்கள் அனைத்து முக்கியமான விதிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசால் நடத்தப்படும் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். எட்டு வயதில் சேர்ந்தால் மாதம் 55 பிரீமியமாக செலுத்த வேண்டும். 30 வயதாக இருந்தால் மாதம் 110 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும். அதேபோல 40 வயதிலிருந்து திட்டத்தில் சேர விரும்பினால் மாதம் 270 முதலீடு செய்ய வேண்டும். இதனால் இந்த திட்டத்தில் பங்கேற்க பெயரை பிஎம் கிசான் திட்டத்தோடு இணைக்க வேண்டும். 60 வயதை பூர்த்தி அடைந்தவுடன் மாதம் 3000 பென்ஷன் வரத் தொடங்கும். மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலமாக 36,000 பலனை பெறலாம். இந்த திட்டம் மக்களிடையே  நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.