உலகின் பெரும் பணக்காரர் என்ற பட்டத்தை எலான் மஸ்க்கிடம் இருந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தட்டிப் பறித்தார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் அடிப்படையில் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.30 பில்லியன் டாலர். 197.70 பில்லியன் டாலர் சொத்துகளுடன் எலான் மஸ்க் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். கொரோனா பரவலுக்குப் பிறகு அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.