கருக்கலைப்பு உரிமையை சட்டமாக்கிய முதல் நாடு என்கிற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. பிரான்சின் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை உள்ளடக்கிய மசோதாவிற்கு பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளனர். இது ஒரு பெண்ணின் கர்ப்பத்தை தானாக முன்வந்து நிறுத்துவதற்கான உரிமையை வெளிப்படையாக உத்தரவாதம் செய்யும் ஒரே நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

கருக்கலைப்பு உரிமை மசோதாவிற்கு 780 வாக்குகள் கிடைத்தன. இதனை எதிர்த்து 72 பேர் வாக்களித்த நிலையில் இந்த சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் உலகிலேயே கருக்கலைப்பு உரிமை சட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.