இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி மன்சரே கோஜஸ்தேவும் (78) உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அண்மையில் கூட்டுத் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த மன்சரே கோஜஸ்தே, சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மன்சரே கோஜஸ்தே (வயது 78). 1964-ம் ஆண்டு அயதுல்லா அலி காமேனியைத் திருமணம் செய்துகொண்டார்.

ஏற்கனவே காமேனியின் மறைவால் ஈரான் கொந்தளிப்பில் உள்ள நிலையில், அவரது மனைவியின் மரணம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் அமைந்துள்ளது. இஸ்ரேலின் இந்தத் தொடர் அதிரடித் தாக்குதல்களால் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

மேலும் மன்சரே கோஜஸ்தேவின் மறைவுக்குப் பிறகு, ஈரானின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.