அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 85 சதவீதம் நிறைவேற்றியதற்காக கோவையில் விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை தற்போது இவர் கூறியுள்ளார். அதாவது அந்த விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டதால் புறக்கணித்ததாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள் நாங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

ஆனால் அப்படிப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கான பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. இதனால்தான் அந்த விழாவினை புறக்கணித்ததாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா எடப்பாடி பழனிச்சாமி சொன்னதால் டீசண்டாக ஒதுங்கி இருக்கிறேன் என்றும் என்னை பார்த்தாலே கட்சிப் பதவி பறிபோகி விடும் என்ற பயத்தால் போஸ்டரில் கூட என்னுடைய படத்தை போட மாட்டார்கள் என்றும் சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அதிமுகவில் சீனியர்கள் இப்படி தங்களுடைய ஆதங்கத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வெளிப்படுத்தி வருவது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.