விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சையான கருத்து வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “எம்.ஜி.ஆர் வெறும் கருணாநிதி மீதான வெறுப்பையும், தனக்கிருந்த சினிமா புகழையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆட்சியை பிடித்தவர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து, ஏற்கனவே எம்.ஜி.ஆர் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட பேச்சால் ஏற்பட்ட சர்ச்சைக்கு மேலும் தீ மூட்டும் வகையில் உள்ளது. வன்னி அரசின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் விரைவாக பரவி, ஆதரவாளர்களிடமும் எதிர்ப்பாளர்களிடமும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.திமுக

சார்பில் நேற்று (8.8.2025) இரவு அம்பத்தூரில் ‘போராளி ஓய்வதில்லை’ என கலைஞரின் நினைவுநாள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றிய எமது தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசும் போது, “கருணாநிதி மீதான வெறுப்பரசியலே தமிழ்நாட்டின் மையமாக இருக்கிறது. எம்ஜிஆர் அதைத்தான் கட்டமைத்தார்” என பேசிவிட்டு,எம்ஜிஆருக்கு பின்னால் பார்ப்பனிய சக்திகள் இருந்தார்கள். அதனால் தான் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு அரசாணையை பிறப்பிக்க முடிந்தது” என உரையாற்றினார்.

இதில் என்ன தவறு இருக்கிறது? அதிமுக பொதுச்செயலாளர் அய்யாEPS காணாமல் போவார் என்றெல்லாம் சாபமிடுகிறார். கடந்த 1979 ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்கள், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு அரசாணையை 1979 சூலை 2 அன்று வெளியிட்டார். (அரசாணை எண் ms no: 1156) திமுக,திக உள்ளிட்ட கட்சிகள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தன.அப்போது நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக இரண்டு இடங்களை மட்டுமே வென்றது.

இதனால் அதிர்ந்து போன எம்ஜிஆர் 1980 சனவரி 19 அன்று அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டினார்.கலந்து கொண்ட எல்லா கட்சிகளுமே, பிற்படுத்தப்பட்டோருக்கு விதிக்கப்பட்ட ஆண்டுக்கு 9,000 ரூபாய் வருமான வரம்பு அளவுகோலை ரத்து செய்ய வலியுறுத்தினர்.உடனே அந்த அரசாணையை ரத்து செய்தார் எம்ஜிஆர். இட ஒதுக்கீடு குறித்து சமூகநீதிப்பார்வை வேண்டும். அந்த பார்வை திரு.எம்ஜிஆருக்கு இல்லை என்பதையே இந்த பொருளாதார அளவுகோலான சிந்தனை வெளிப்படுகிறது.

வெறுமனே கருணாநிதி வெறுப்பு மற்றும் தனக்கிருந்த சினிமா புகழை மட்டுமே வைத்து ஆட்சியை பிடித்தவர் எம்ஜிஆர். மற்றபடி எந்த கோட்பாட்டு பின்னணியும் இல்லை. குறிப்பாக கலைஞருக்கு இருந்த பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் எம்ஜிஆரிடம் இல்லை என்பதே உண்மை. எமது தலைவர் உரையும் அதைத்தான் வெளிப்படுத்தியது. உச்சகட்டமாக “நான்ஒரு பாப்பாத்தி”என சட்டப்பேரவையிலேயே சொன்ன ஜெயலலிதா அம்மையார் திராவிட இயக்கத்துக்கு தலைமை தாங்கியிருப்பதையும் பார்க்கலாம்.

இதை புரிந்து கொள்வதற்கு முதலில் சித்தாந்த சிந்தனை வேண்டும். அது மரியாதைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.அதனால் தான் எமது தலைவரின் உரையை கேட்காமலே சாபமிடுகிறார். இன்னும் உரத்துச்சொல்வோம் எம்ஜிஆரை உருவாக்கியதே பார்ப்பனியக்கும்பல் தான். இப்போது எடப்பாடி அவர்களை பின்னிருந்து இயக்குவது போல. – வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி 9.8.2025 என்று குறிப்பிட்டுள்ளார். 

 

“>