இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்க மாநிலத்தில் எம்எல்ஏக்களுக்கு ஊதியம் குறைவாகத்தான் வழங்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தற்போது உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி எம்எல்ஏக்களுக்கு 40 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் கேபினட் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மாத சம்பளம் அலோவன்ஸ்கள் மூன்று வகைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சம்பள உயர்வுக்குப் பிறகு சம்பளம் மற்றும் அலோன்ஸ் என மாதம் 81 ஆயிரம் பெற்று வந்த எம்எல்ஏக்கள் இனி 1.21 லட்சம் வரை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.