மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண்ணுக்கு ஓட்டுநர் ஒருவர் ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பெண் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் பயண நிறுவனத்தின் முன்பதிவு அலுவலகத்தில் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவர் அடிக்கடி மும்பைக்கு அதே நிறுவனத்தின் பேருந்தில் பயணித்தார். இதைப் பார்த்த ஓட்டுநர், டிக்கெட் முன்பதிவு பதிவேட்டில் இருந்து அவரது தொலைபேசி எண்ணை எடுத்து, ஆபாச வீடியோக்களை அனுப்பத் தொடங்கினார்.

இதனால் கோபமடைந்த பெண், செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பருடன் முன்பதிவு மையத்திற்கு சென்று, அந்த ஓட்டுநரை தேடி பிடித்து அடித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், இரண்டு பெண்கள் சாலையில் ஓட்டுநரைஅடிப்பது தெரிகிறது.