சென்னையில் தேங்கிய மழை நீரை எப்போது மோட்டார் வாங்கி, எப்போது வெளியேற்றுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.4,000 கோடிக்கு பணிகள் நடந்ததாக அமைச்சர்கள் கூறினாலும் மக்களுக்கு ஒன்றும் போய்ச்சேரவில்லை.

அதிமுக ஆட்சியில் பருவமழைக்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்டன, ஆனால் திமுக ஆட்சியில் நேற்றுதான் மீட்புப் பணிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வானிலை முன்பே அறிவித்தும் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.