பயணங்களை எளிதாக்கும் ‘ராபிடோ’ போன்ற செயலிகள், சில நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் மாறிவிடுகின்றன.
அந்த வகையில், அனுஷ்கா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள ஒரு தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ராபிடோவில் பயணம் செய்த இவருக்கு, அந்த பயணம் முடிந்த சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்ட ரைடரிடம் இருந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்துள்ளது.
ரைடர் தன்னை நேரில் சந்திக்க அழைப்பதாகக் கூறி, அந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் வெளியிட்டுள்ளார். பயணம் முடிந்த பிறகு ஒரு ரைடரால் எப்படி வாடிக்கையாளரின் தனிப்பட்ட மொபைல் எண்ணைத் தொடர்புகொள்ள முடிந்தது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ராபிடோ நிறுவனம் இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. ரைடரின் இத்தகைய செயல் தங்களின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
View this post on Instagram
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அவரது பயண விவரங்களைப் பெற்றுள்ள ராபிடோ, இதுபோன்ற அத்துமீறல்களைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தனிமனித ரகசியம் மற்றும் தரவுப் பாதுகாப்பு (Data Privacy) குறித்த கவலையை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
