
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக டிஜிபிக்கு ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நானும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இர்பான் ஜெனிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த 2020-ஆம் ஆண்டு நான் துபாயில் வேலை பார்த்தேன்m எனது மனைவி ஜெனிபர் சென்னையில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்தார்.
வாகன விபத்தில் ஜெனிஃபர் இறந்துவிட்டார். கொரோனா காலகட்டம் என்பதால் அவரது இறுதி சடங்கில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. எனது மாமியார் அலி பாத்திமா, மைத்துனர் அமீர் சுல்தான் ஆகியோர் எங்களது மத வழக்கப்படி எனக்கும் எனது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக போலியான பத்திரத்தை தயார் செய்து கொடுத்துள்ளனர். மேலும் என் மனைவியின் இறப்பு சான்றிதழில் எனது பெயரை சேர்க்காமல் விட்டு விட்டனர்.
எனது மகன் முகமது சுகர்னோ என்ற பெயரை நீக்கி விட்டு தனீர் அகமது என ஆதார் அட்டையில் பெயரை மாற்றியுள்ளனர். இது குறித்து கேட்டபோது காப்பீடு தொகையை பெற வேண்டும் என்ற உட்கருத்துடன் போலியான பத்திரத்தை தயார் செய்தது தெரியவந்தது. அதனை உண்மை ஆவணமாக பயன்படுத்தி மோசடி செய்து விட்டனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்m அந்த புகாரின் பேரில் அலி பாத்திமா, அமீர் சுல்தான் இரண்டு பேரும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.