பிலிப்பைன்ஸ் நாட்டில் மௌரீன் கலாகோ என்ற பெண் கடலுக்கடியில் ஆழமாக மூழ்கிப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு பிரம்மாண்டமான திமிங்கலச் சுறா அவருக்குப் பின்னால் தோன்றியது. அவர் கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்தச் சுறா மெதுவாக வந்து அவரது கையை முட்டியது.

உலகின் மிகப்பெரிய மீன் இனத்தைச் சேர்ந்த அந்தச் சுறாவைக் கண்டதும் எவரும் அலறித் துடித்திருப்பார்கள், ஆனால் மௌரீன் மிகவும் நிதானமாகச் செயல்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.சுறா மிக அருகில் வந்தபோதும் பதற்றமடையாத அவர், அதற்கு எந்த இடையூறும் தராத வகையில் தனது கைகால்களை அசைக்காமல் மெதுவாக நீரின் மேற்பரப்பை நோக்கி நீந்தத் தொடங்கினார்.

இந்தச் சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “கடல் அவர்களின் வீடு, நாம் அங்கு விருந்தினர்கள் என்பதை இந்த வீடியோ நினைவூட்டுகிறது” என்றும், “அந்தச் சுறா புகைப்படத்திற்கு வழிவிடுமாறு கேட்பது போல இருக்கிறது” என்றும் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.