தெலங்கானாவின் மெட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில், கிசாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்மைடா நகராட்சி பகுதியில் உள்ள நர்சம்பள்ளி கிராமத்தில் வசிக்கும் பிரவீன் மற்றும் ஸ்வேதா என்ற இளைஜோடி, ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
ஸ்வேதாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்க மறுத்த நிலையில், கடந்த ஜூலை 11-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு ஓடி, சிகந்தராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்துகொண்டு, ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், பிரவீனின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை பார்க்க இருவரும் சொந்த ஊருக்கு திரும்பினர்.
இதை அறிந்த ஸ்வேதாவின் பெற்றோர் பால நரசிம்மா, மகேஸ்வரி மற்றும் உறவினர்கள், பிரவீனின் வீட்டிற்கு காரில் வந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த அதிர்ச்சி சம்பவம் CCTV-யில் பதிவாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரவீன் மற்றும் அவரது பெற்றோர் சிட்டாரி, பத்மலாவின் கண்களில் மிளகாய் பொடி தூவி அடித்து துன்புறுத்திய ஸ்வேதாவின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் தடுக்க முயன்றபோதும் வீட்டுக்குள் புகுந்து ஸ்வேதாவை இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.
அவரது கை கால்களை கட்டி, காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன், தனது மனைவியை கடத்தியதாக சசுறு, சசுரால் உள்ளிட்டோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
“என் மனைவிக்கு அவர்கள் ஏதாவது செய்து விடுவார்களோ என அச்சமாக உள்ளது, உடனடியாக உதவுங்கள்” என பிரவீன் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
