மத்தியப் பிரதேச மாநிலத்தின் அமர்பதனில் இருந்து ஒரு வித்தியாசமான மற்றும் சிக்கலான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அசுதோஷ் பன்சால் என்ற இளைஞர், தனது மனைவி சந்தியா காணாமல் போனதாக கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் திடுக்கிடும் தகவலாக, தனது மனைவி சந்தியாவுக்கும், தனது தாய் மாமாவின் மகள் மான்சிக்கும் நெருங்கிய மற்றும் ரகசிய உறவு இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்க்கை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் புகாரில் தெரிவித்தார்.

அசுதோஷ் – சந்தியா இருவரும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் ஒரு ஐந்து வயது மகனை பெற்றுள்ளனர். முதலில் அமர்பதனில் வசித்த இந்த தம்பதிகள், பின்னர் அசுதோஷின் படிப்பிற்காக ஜபல்பூருக்கு மாறினர்.

அங்கு உள்ள ஷீட்லா மாயில் வாடகை வீட்டில் தங்கிய அவர்கள், மான்சி வீட்டிற்கு அடிக்கடி வருவதை ஆரம்பித்ததுடன், சந்தியா மற்றும் மான்சிக்கு இடையே நட்பாக தொடங்கிய உறவு, ரகசியமாக மேலும் நெருக்கமாகியது என அசுதோஷ் கூறுகிறார்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி, சந்தியா வீட்டை திடீரென விட்டு வெளியேறியதை அடுத்து, அசுதோஷ் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தியா ஜபல்பூரிலிருந்து ரஞ்சி நோக்கி செல்வது தெரியவந்தது. சந்தியா மான்சியின் வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என அவர் சந்தேகித்தாலும், அங்கும் கிடைக்கவில்லை.

பின்னர், அவர் சந்தியாவை ரயில் நிலையத்தில் கண்டார் – ஆனால் மனைவி  அவரிடம் எதுவும் சொல்ல மறுத்துவிட்டார் , இனி ஜபல்பூரில் வசிக்க விரும்பவில்லை என்று கூறி, தன்னை அமர்பதானுக்கு (ஊர் ) அழைத்துச் செல்லும்படி கேட்டாள். அசுதோஷ் தனது மகன் மற்றும் மனைவியுடன் அமர்பதானுக்குத் திரும்பினார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 22 அன்று சந்தியா மீண்டும் எந்தவிதமான தகவலும் கூறாமல் காணாமல் போயுள்ளார். அசுதோஷ், ஜபல்பூர் மற்றும் மைஹார் காவல் நிலையங்களில் எழுத்துப்பூர்வ புகார்கள் அளித்துள்ளார். மேலும், சந்தியா மற்றும் மான்சிக்கு இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களின் நகல்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தற்போது, சந்தியாவைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் உணர்திறனை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் ஒவ்வொரு தகவலையும் மிக கவனமாக விசாரித்து வருகின்றனர். சந்தியா இன்னும் இருப்பிடம் தெரியாத நிலையில், குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியிலும் கேள்விகளிலும் சிக்கியுள்ளனர்.