புதுச்சேரி ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருந்தப்போ நடந்த ஒரு ரகசிய விஷயத்தை சி.வி.சண்முகம் இப்போ உடைச்சிருக்காரு. “நான் மேல பேசிட்டேன், திமுக ஆதரவோட என் தலைமையில ஆட்சி அமையப்போகுது, நீங்க எல்லாரும் அமைச்சராகலாம், பாஜகவும் நம்மகூட சேர்ந்துக்கும்” அப்படின்னு எடப்பாடி பழனிசாமி சொன்னதா சி.வி.சண்முகம் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுருக்காரு. இது அதிமுக வட்டாரத்துல மட்டும் இல்லாம, தமிழக அரசியல்லயே ஒரு பெரிய அதிர்வலையை உண்டாக்கியிருக்கு.
அதுமட்டும் இல்லாம, ஒரு எமோஷனல் சவாலையும் விடுத்திருக்காரு சி.வி.சண்முகம். “என் புள்ளையையும் உங்க புள்ளையையும் இங்க நிறுத்துங்க.. என் புள்ளை தலையில அடிச்சு சத்தியம் பண்ணுறேன், திமுகவோட கூட்டணி வைக்கலாம்னு நீங்கதான் சொன்னீங்க. அதேமாதிரி உங்க புள்ளை தலையில கை வச்சு உங்களால சத்தியம் பண்ண முடியுமா?” அப்படின்னு எடப்பாடியைப் பார்த்து காட்டமா கேள்வி கேட்டுருக்காரு. இப்போ இந்த நேரடி மோதல் அதிமுக அரசியல்ல அடுத்தடுத்த திருப்பங்களுக்கு வழிவகுக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
