
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இந்த சிறுமி கல்லூரிக்கு சென்று வரும் வழியில் சில ஆட்டோ டிரைவர்கள் நட்புடன் பழகி வந்துள்ளனர். அதன்படி சிறுமியுடன் ரித்தீஷ் (21), குலசேகரன் மற்றும் வெங்கட் ஆகியோர் பழகினர். இவர்கள் மூவரும் அடிக்கடி சிறுமியை வெளியில் அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்த சிறுமி திடீரென கர்ப்பமானார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த சம்பந்தப்பட்ட இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதன்பிறகு தலைமறைவாக உள்ள வெங்கட் என்பவரை தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.