தமிழ் சினிமா திரையுலகில்  போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனை தொடர்ந்து நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தனது இரண்டாவது படமான நானும் ரௌடி தான் திரைப்படத்தில் கதாநாயகி நயனை  வைத்து படம் எடுத்தார். அப்போது இருவரும் காதலிக்க ஆரம்பித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தற்போது விக்னேஷ் சிவன் நயனை வைத்து கனேக்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் “விக்னேஷ் சிவன் தான் எடுக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகளை வைக்க மாட்டேன் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இவர் எடுக்கும் காதல் படங்களிலும் இது போன்ற காட்சிகள் இருக்காது என உறுதியாக” தெரிவித்துள்ளார். இது குறித்து பல சென்சார் போர்டு அதிகாரிகள் பேசி இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.