இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்கில் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் தமன்னா காவலா பாடலுக்கு படு கிளாமராக ஆடியிருந்தார்.

இந்நிலையில்  ஜெயிலர் படத்தை பார்க்கவந்த நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ், நடிகை தமன்னாவுக்காக புதிய பாவாடை ஒன்று கொண்டுவந்த சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியது. படம் பார்க்க செல்லும்முன் பேசிய அவர், காவாலா பாடலுக்கு தமன்னா கிழிந்த பாவாடையுடன் ஆடுவதாகவும், அதனால் “தங்கை தமன்னாவுக்கு” புதிய பாவாடை தைத்து எடுத்துவந்ததாகவும் கூறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.