
உத்திர பிரதேச மாநிலத்தில் ஜக்தீப் சிங் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பூனம் தேவி என்ற மனைவி இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த 2 வருடங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதில் பூனம் தேவி தன்னுடைய தாய் தந்தையுடன் வசித்து வரும் நிலையில் ஜக்தீப் சிங் தன் மனைவியிடம் மீண்டும் சேர்ந்து வாழ வருமாறு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்துவிட்டார்.
அவர் கத்தியால் குத்தியதில் ஆனந்த் ராம் (80), ஆஷா தேவி (75) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் இதை தடுக்க வந்த அவரது மனைவிக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பூனம் தேவியின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.