உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது 2026-ஆம் ஆண்டின் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ஸ்பெயின் நாட்டின் அசாத்திய வெற்றியோடு நிறைவடைந்துள்ளது. ஒட்டுமொத்த உலக நாடுகளையும் தன் பக்கம் ஈர்த்த இந்த மெகா இறுதிப் போட்டியில், சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ஸ்பெயின் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றித் தருணத்தைக் கொண்டாடும் விதமாக, ஸ்பெயின் அணியின் நட்சத்திர முன்கள வீரரான நிக்கோ வில்லியம்ஸ் மைதானத்தில் செய்த ஒரு நெகிழ்ச்சியான காரியம் தற்சமயம் சமூக வலைதளங்களில் பரவி, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான‌ விளையாட்டு ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்று மகுடம் சூடியதைத் தொடர்ந்து, மைதானத்தில் வீரர்களுக்கு உலகக்கோப்பை வெற்றிப் பதக்கம் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமக்கான தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்ட நிக்கோ வில்லியம்ஸ், அடுத்த சில நொடிகளிலேயே மைதானத்தின் பார்வையாளர்கள் பகுதியில் தமக்காகக் காத்துக்கொண்டிருந்த தனது தாயாரை நோக்கி ஓடினார்.

ஒட்டுமொத்த உலக கேமராக்களும் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்த அந்தப் பெருமைமிகு தருணத்தில், தான் பெற்ற விலைமதிப்பற்ற உலகக்கோப்பைதங்கப் பதக்கத்தைத் தனது தாயின் கழுத்தில் அணிவித்து, அவரை இறுக்கமாகக் கட்டியணைத்துப் பூரித்துப்போனார்.

 

“>

தனது மகனின் இந்த அசாத்திய சாதனைக் கொண்டாட்டத்தைக் கண்டு நெகிழ்ந்துபோன அவரது தாயார் கண்ணீர் மல்க அவசரமாக மகனை முத்தமிட்ட காட்சிகள், பார்ப்பவர் எவரையும் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது. ஒரு தாய்க்கு அவளது மகன் கொடுக்கக்கூடிய ஆகச்சிறந்த உலக அளவிலான அங்கீகாரம் இதுதான்” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு தங்களது நெகிழ்ச்சியான வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.