மேற்கு இங்கிலாந்தில் உள்ள ப்ளைமவுத் என்ற நபரில் உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அவரின் இரண்டு வளர்ப்பு நாய்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த இரண்டு நாய்களையும் கண்டுபிடித்த விலங்கு நல வாரியம் நாய்களுக்கு மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்தது. அப்போது மருத்துவர்கள் பரிசோதனையில் இரண்டு நாய்களும் மதுவுக்கு அடிமையானது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நாய்கள் அவசர பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் அதில் ஒரு நாய் உயிரிழந்து விட்டது. மற்றொரு நாய் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.

நாய்களின் உரிமையாளர் மது அருந்துபவர் என்றும் அவர் குடித்துவிட்டு மீதம் வைத்த மதுவை அவருக்கு தெரியாமல் அடிக்கடி குடித்து வந்த அவரின் வளர்ப்பு நாய்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாகவும் விலங்கு நல வாரியம் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த நாய்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மனிதர்கள் மதுவுக்கு அடிமையாகும் காலத்தில் நாய் மதுவுக்கு அடிமையாகி மறுவாழ்வு அளிக்கப்பட்ட வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.