பிரதமர் மோடி திடீரென கச்சத்தீவை பற்றி பேசுவது, என்ன காந்தி இறந்துவிட்டாரா என்பதைப் போல உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 1974 ஆம் ஆண்டு தாரை வாக்கப்பட்ட கச்சத்தீவை பற்றி அண்ணாமலை ஆர்டிஐயில் இப்போது கேட்டுள்ளார். இவ்வளவு நாட்கள் எங்கே போனார்? அப்படியே குஜராத் கலவரத்தை பற்றியும் மணிப்பூர் கலவரத்தை பற்றியும் ஆர் டி ஐ போட்டு தகவலை எடுக்க சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.