
தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
தமிழகத்தில் மொத்தமாக 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவிகள் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கமாக மாணவர்களை விட மாணவிகள் தான் இந்த வருடமும் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த இரட்டை சகோதரர்களான ஆதிசேஷன், அபி ஸ்ரீ வர்ஷன் ஆகிய இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மாதிரியாக 357 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர். பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் சகோதரர்கள் மதிப்பெண்ணும் ஒரே மாதிரி எடுத்ததால் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.