
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள சில மருந்துகளால் மூளையை பாதிக்கும் பக்க விளைவுகள் ஏற்படம் என்பதால் மருத்துவர்கள் அதனை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். அதோடு அந்த மருந்துகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே இதனை வழங்க இயலும் என்ற பட்டியலில் இடம்பெரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் நடத்திய ஆய்வுகள் கூறியிருப்பதாவது “Sudare, Nurofen, Day and night nurse ஆகிய மருந்துகள் இனி புழக்கத்தில் இருக்காது. இந்த மருந்துகளை இங்கிலாந்து நாட்டவர்கள் பொதுவாக சளியை குணப்படுத்த பயன்படுத்துவர். இந்த மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைவலி, பார்வை கோளாறு, உளவியல் சிக்கல்கள், வலிப்பு போன்றவை முதலில் ஏற்படும். அதன் பின் மூளைக்கான ரத்த ஓட்டம் நாளடைவில் குறையும். அதோடு மரணத்தை கூட ஏற்படுத்தும்” என கூறப்பட்டுள்ளது.