
ஜெய்ப்பூரில் திறந்தவெளி வடிகால் குழியில் தவறுதலாக தனது தொலைபேசியை இழந்த ஏழை நபர் ஒருவர், அதை மீட்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் பரிதாபமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம், நகர நிர்வாகத்தின் அலட்சியத்தையும், சாலைகளில் நீர் தேங்கும் பிரச்சனையையும் மிகத் தெளிவாக காட்டுகிறது.
வீடியோவில் காணப்படும் அந்த நபர், ஒரு பரபரப்பான சாலையின் நடுவே, முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தனது தொலைபேசியை தேட முயற்சிக்கிறார். கால்கள் முழுவதுமாக நனைந்து, வலிமையற்ற மனநிலையுடன் தனது கைகளை குழியில் நீட்டுகிறார். பின்னர், குழிக்குள் ஒரு கார் சறுக்கி செல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. வீடியோ முடிவில், அந்த நபர் நிராதரவாக ஒரு மூலையில் நின்று கண்ணீருடன் அழுவதும் கண்கலங்க வைக்கும்.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் எக்ஸ் கணக்கில் நிரஞ்சன் சிங் ஹன்சாவத் பகிர்ந்துள்ளார். அதில், “ஜெய்ப்பூர் நகரில், ஒரு ஏழை சகோதரனின் தொலைபேசி திறந்தவெளி குழியில் விழுந்தது. அவர் மிகவும் அழுதார். ஆனால் அவரால் என்ன செய்ய முடியும்? இது அவரது தவறா அல்லது அமைப்பின் அலட்சியமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சம்பவம், நகரங்களின் அடிப்படை வசதிகளின் மீது கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.
இதனுடன், கடைசி 24 மணி நேரத்தில் டெல்லி மற்றும் குருகிராம் பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நிலைமைகளில் சிக்கிய மக்கள், சமூக வலைதளங்களில் தங்கள் வேதனையை பகிர்ந்து வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள், நகராட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பார்வையை திருப்ப வைத்துள்ளன. மேலும் இதோ அந்த வீடியோ,
जयपुर शहर में एक ग़रीब भाई का फ़ोन सिस्टम के खुले गड्ढे में गिर गया। बेचारा खूब रोया मगर करे क्या ! जिम्मेदार तो सिस्टम नहीं ख़ुद है ? #jaipur #rajasthan #reporternikki pic.twitter.com/hRmOcMMW7Q
— Niranjan Singh Hansawat (@ReporterNikki) July 10, 2025