ஆக்ராவின் ருன்கடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மனிதநேயமற்ற ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எடா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆக்ராவில் உள்ள காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவிக்கு திங்கு என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை கணவர் கண்டித்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் வீட்டு உரிமையாளருடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இரவு, அந்த இளைஞர் காய்கறிச் சந்தை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, மூவரும் சேர்ந்து அவரை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். பின்னர் கத்தியால் அவரது பிறப்புறுப்பை அறுத்து, அவரை உயிருக்குப் போராடும் நிலையில் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த இளைஞர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் மனைவியும் அங்கிருந்ததாகக் கூறிய இளைஞர், தற்போது தனது வாக்குமூலத்தை மாற்றி வருவதால் போலீசாருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
