
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் சமீபத்தில் தி கிரேட் இந்தியன் என்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சல்மான்கான் மிகவும் உருக்கமாக தன் வாழ்க்கையை பற்றி பேசினார். அதாவது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவும் நிலையில் அதைப்பற்றி மனம் திறந்து பேசினார். அவர் பேசியதாவது,
எனக்கு உடலில் பல பிரச்சினைகள் இருக்கிறது. இருப்பினும் 59 வயதிலும் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்பவர் ஒருவேளை என்னை பிரிய முடிவு செய்து என்னிடம் இருக்கும் பாதி பணத்தை எடுத்துக் கொள்ள முடிவு செய்தால் மீண்டும் என் வாழ்க்கையை தொடங்குவதற்கு எனக்கு துணிச்சல் இல்லை.
நான் ஒவ்வொரு நாளும் வலியிலும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு முகத்தில் உண்டாகும் ஒரு வகை நரம்பு வலியான டிரைஜீமினல் நியூரால்ஜியா ரத்த நாளங்களில் வீக்கம், தமனி குறைபாடு போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. மேலும் இதுபோன்ற பிரச்சனைகளால் நான் பாதிக்கப்பட்டிருந்தாலும் வேலை செய்வதை மட்டும் நிறுத்தவில்லை என்று கூறியுள்ளார்.