மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்குள், காதலி என்றும் பாராமல் இளம்பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலி மீது ஏற்பட்ட கடுமையான சந்தேகத்தின் காரணமாக இருவருக்கும் இடையே கடையில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சற்றும் இரக்கமின்றி அந்தப் பெண்ணை சரமாரியாகக் குத்தியும், கன்னத்தில் அறைந்தும், கால்களால் எட்டி உதைத்தும் கடுமையான வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
Shocking: Man brutally beats girlfriend (kicks, punches, slaps) inside a Pimpri Chinchwad clothing store over suspicion. CCTV captured the public assault. Outrage grows. https://t.co/iZ3gxPczym
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 28, 2026
இந்த ஒட்டுமொத்த கொடூர சம்பவமும் அங்கிருந்த ஜவுளிக்கடையின் சிசிடிவி (CCTV) கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே கடுமையான ஆத்திரத்தையும், கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. காதல் என்ற பெயரில் பொது இடத்தில் பெண்ணை மிருகத்தனமாகத் தாக்கிய அந்த வாலிபரை உடனடியாகக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சோசியல் மீடியாவில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
