
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவருடைய பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியதன் காரணமாக சாலையின் நுழைவாயிலில் இருந்த காவல்துறையினர் அவரை விட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விசாரித்ததில் அவர் சந்தோஷ் என்பதும் போதையில் இருந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர் அங்கு, என்னைப் போல மதுவுக்கு யாரும் அடிமையாகக்கூடாது எனவே டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.