
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஸ்டூடியோ கிரீன் மற்றும் நிலம் புரொடக்ஷன்ஸ் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அங்கு நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய அரசியல் மிகவும் பிடிக்கும் என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து “மெட்ராஸ்” திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் தனக்கு “கபாலி” படத்திற்கு வாய்ப்பு கொடுத்தார் எனவும் கூறினார். அதன்பின் கபாலி வெற்றியடைந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் தனக்கு “காலா” படத்தை இயக்குவதற்கான வாய்ப்பையும் கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.