மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், பார்ப்போரை அதிரவைக்கும் ஒரு துயரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் 17 வயதுடைய மைனர் சிறுவன், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது சித்தியால் கடுமையான மன மற்றும் உடல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளான்.

மேலும் சிறுவனின் தந்தை இறந்ததைத் தொடர்ந்து, அவனது எதிர்காலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உறவினர்கள் அவனது பொறுப்பை சித்தியிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால், அந்தப் பெண் அந்தச் சிறுவனைத் தன்னுடன் கட்டாய உடலுறவு கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி, கடுமையான அழுத்தத்தைக் கொடுத்து வந்துள்ளார்.

இதனால் சித்தியின் இந்த வற்புறுத்தலுக்கு அந்தச் சிறுவன் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், சிறுவனை மிகக் கொடூரமாகத் திட்டி, அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனால் மிகுந்த பயமும் மன உளைச்சலும் அடைந்த அந்தச் சிறுவன், இறுதியாக தனது சித்தியிடமிருந்து தப்பித்துத் தனது அத்தையிடம் சென்று தனக்கு நேர்ந்த கொடூரங்களை விவரித்துள்ளான்.

இதனைத் தட்டிக்கேட்கச் சென்ற அந்த உறவினரையும் அந்தப் பெண் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். இதனால், சற்றும் தாமதிக்காத அந்தச் சிறுவன் நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று தனது சித்தி மீது புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.