Samsung நிறுவனம் இந்திய பயனர்களுக்கு “Big TV Days” பெயரில் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 31, 2023 வரை சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. சிறப்பு விற்பனையின் அங்கமாக கேஷ்பேக் சலுகை, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, நிச்சயிக்கப்பட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்குவோருக்கு Samsung Galaxy Z ஃபோல்டு 4 மற்றும் Galaxy A23 போன்ற ஸ்மார்ட்போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நாடு முழுக்க செயல்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட ரிடெயில் ஸ்டோர் மற்றும் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் சாதனங்களை வாங்குவோருக்கு பொருந்தும்.

Samsung நிறுவனத்தின் உயர் ரக மற்றும் பிரீமியம் டிவி மாடல்களை வாங்குவோருக்கு Galaxy Z ஃபோல்டு 4 (12 ஜிபி, 256 ஜிபி) மாடல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 98 இன்ச் நியோ QLED 4K டிவி அல்லது 85 இன்ச், 75 இன்ச் நியோ QLED 8K டிவி வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 மதிப்புள்ள Galaxy Z ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் கிடைக்கும். வழக்கமாக ஸ்மார்ட் டிவிக்களுக்கு ஒரு வருட வாரண்டியே வழங்கப்பட்டு வந்த நிலையில் சிறப்பு விற்பனையை முன்னிட்டு டிவி-க்களுக்கு 2 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட நியோ QLED 8K டிவி மாடல்களுக்கு அதிகபட்சம் 20 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எனினும், எந்தெந்த மாடல்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என சாம்சங் அறிவிக்கவில்லை.