சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பொதுவாக மகனோ அல்லது மகளோ காதலருடன் ஊர் சுற்றும்போது பெற்றோரிடம் மாட்டிக்கொண்டால் அங்கே திட்டும் அடியும் தான் விழும். ஆனால், இங்கே ஒரு புத்திசாலி அம்மா தனது மகன் காதலியுடன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருப்பதைப் பார்த்ததும், சண்டை போடுவதற்குப் பதிலாக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

எதற்கும் அலட்டிக்கொள்ளாத அந்த அம்மா, அடுத்த வினாடியே அந்த இடத்திலேயே இருவருக்கும் நிச்சயதார்த்தத்தை உறுதி செய்து, அங்கிருந்தவர்களையே அதிர வைத்துள்ளார். மகன் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லுவார் அல்லது இனிமேல் ரகசியமாகச் சந்திப்பார் என்று தெரிந்தே, “இனிமேல் திருட்டுத்தனமா மீட் பண்ண இடமே இல்லை” என்பது போல அந்த இடத்திலேயே பேசி மேட்டரை முடித்துவிட்டார்.

இந்த புத்திசாலித்தனமான அம்மா எடுத்த முடிவைப் பார்த்த நெட்டிசன்கள், “இவங்க தான் 2K கிட்ஸ் காலத்து ஸ்மார்ட் அம்மா” என்று பாராட்டி வருகின்றனர். “ஏன்டா மாட்டினோம்” என்று மகன் முழிப்பதும், அந்த அம்மா கெத்தாக முடிவெடுப்பதும் அடங்கிய இந்த வீடியோ தற்போது இணையவாசிகளைப் பெரும் சிரிப்பலையில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது.