19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்காக, அனைத்து அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, நேற்று பெங்களூரு வந்தடைந்தார். அவர் சின்னசாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
<a href=”http://
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
