தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையின் போது ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கு பணம் கொடுத்தார் என்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று கோவை மாநகர ஆட்சியர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக வெளியான வீடியோ ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம் 29ஆம் தேதி என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்டது. பொதுவாக ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பது நம் கலாச்சாரம். ஆனால் இதனை நாங்கள் தேர்தல் நேரத்தில் பயன்படுத்துவது இல்லை. தற்போது பொய்யை  பரப்பும் கட்சிகள் இவ்வாறு பணம் கொடுக்கும் போது விழிப்புடன் இருங்கள் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.