பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்விக்கி, சொமட்டோ போன்ற  ஆன்லைன் நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று மது டெலிவரி செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அதனுடைய சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் விநியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றவர்களுடன் கலந்தாய்வு செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். மதுவை வீடுகளுக்கு சென்று விநியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்து கூட பார்க்க முடியாது .இது போன்ற திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.