மின் கம்பத்தை வேரோடு பிடுங்குவதற்காக வந்த ஒரு ஜேசிபி (JCB) இயந்திரம், சமநிலை தவறி பள்ளத்தில் கவிழ்ந்த அதிர்ச்சிக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜேசிபி-யில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் மூன்று பேர் இருந்தனர். கம்பத்தைப் பிடுங்க முயற்சிக்கும்போது, திடீரென ஜேசிபி தலைகீழாகப் பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தைக் கண்ட மக்கள் உடனடியாக அவர்களைக் காப்பாற்ற ஓடினர்.

இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. இந்த காணொளியைப் பார்த்தவர்கள், “ஜேசிபி ஓட்டுநருக்குச் சரியாக ஓட்டத் தெரியவில்லை போல” என்று விமர்சித்தும், சிலர் “சமூக ஊடகத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக இதைச் செய்திருக்கலாம்” என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.