மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள உமர்பன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி 17 வயதுடைய சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டனர். உயிரிழந்த மாணவி, ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அந்த மாணவியை அடிக்கடி தொந்தரவு செய்து வந்த சக மாணவன் ஒருவரிடம் போலீசார் விசாரித்த போது அவரே அந்த சிறுமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அந்த மாணவி திடீரென மாணவனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் மே 2 ஆம் தேதி இரவு, விவசாய நிலத்திற்கு வருமாறு சிறுமியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி சென்ற மாணவியை அங்கு கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி மாணவனை கொலை செய்துள்ளார். இந்த கொடூரமான சம்பவம் தார் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மாணவனைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
