2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதிமுக மற்றும் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய விஜய்க்கு மிகப்பெரிய ஆஃபர்கள் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, தவெக-வுக்கு 90 தொகுதிகள், முக்கிய அமைச்சரவை துறைகள் மற்றும் இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி எனப் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும், விஜய் அவற்றைச் சற்றும் யோசிக்காமல் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பெரிய கட்சிகளின் தயவில் அல்லது அவர்களின் ‘முதுகில் சவாரி செய்து’ முதலமைச்சராக அமரத் தான் விரும்பவில்லை என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.

அதிமுக-வின் இடத்தை பிடிப்பதே தனது இலக்கு என்பதால், அவர்களுடன் கூட்டணி வைத்து மீண்டும் அதிமுக-வை வளர்க்க அவர் விரும்பவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தன்னையும் தனது கொள்கைகளையும் நம்பிப் பின்னால் வரும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் சக்தியை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள விஜய் தயாராக இல்லை.

தனித்து நின்று மக்களின் நேரடி ஆதரவைப் பெற்று ஒரு நிலையான தலைவராக உருவெடுக்கவே அவர் விரும்புவதால், இந்த மெகா ஆஃபர்களைத் தூக்கியெறிந்துள்ளார்.