மும்பை சிவாஜி நகரின் ஃபுர்கானியா மசூதி அருகே வசித்து வந்த 19 வயது இளம்பெண் ஷிஃபா ஷேக், கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண், ஷிஃபாவைத் தனியாகப் பேச வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஷிஃபாவின் முகத்தில் மிக அருகிலிருந்து அந்தப் பெண் சுட்டுள்ளார்.
குண்டு கன்னம் வழியாக மண்டை ஓட்டுக்குள் பாய்ந்ததில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷிஃபாவை, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள், கொலையில் தொடர்புடைய 25 வயது பெண் மற்றும் 23 வயது ஆண் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு ஆணை இரண்டு பெண்கள் காதலித்ததில் ஏற்பட்ட பொறாமையே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
