உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சோனு. இவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு ஊர் முழுவதும் திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார். ஆனால் வேண்டுமென்றே பக்கத்து வீட்டுக்காரரான வான்ஷ் என்பவருக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த வான்ஷ் ஹல்தி நிகழ்ச்சி நடைபெறும் போது மது போதையில் மணமகனின் வீட்டிற்குள் நுழைந்தார்.

அப்போது திடீரென போதையில் சோனு மீது துப்பாக்கி சூடு நடத்தியதோடு, அங்கிருந்த பெண்களையும் உறவினர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வான்ஷை கைது செய்ய முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தப்பித்து ஓடிவிட்டார். இதனை அடுத்த படுகாயமடைந்த சோனுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.