மதுரையில் உள்ள அரிடாப்பட்டி பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் 5000 ஏக்கர் பரப்பளவில் அமைய வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த நிலையில் அதற்கு மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறி சுரங்கம் அமையாது எனக் கூறிய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. சமீபத்தில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் தொடங்கும் வராது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழக அரசுக்கு மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில் இன்று அரிடாப்பட்டியில் முதல்வர் ஸ்டாலினுக்கு சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இதற்கு காரணம் மக்களின் சக்தி எனவும் மத்திய அரசு மக்களின் போராட்டத்திற்கு 3 மாதத்தில் பணிந்துள்ளது எனவும் கூறினார். அதோடு எனக்கு பதவி பற்றி கவலை இல்லை எனவும் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது, கிராம மக்களின் அன்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நான் இங்கு வந்துள்ளேன். இதனை உங்களுக்காக நடைபெறும் பாராட்டு விழா என்றுதான் நான் நினைக்கிறேன். மத்திய பாஜக அரசு எப்போதுமே மக்களுக்கு விரோதமான செயல்களை செய்து வரும் நிலையில் நான் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக தான் இருப்பேன். டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிராக 3 மாதத்தில் கிடைத்துள்ள வெற்றி மாபெரும் வெற்றி. இதனை நிறுத்தியது மக்கள் சக்திதான்.

மக்கள் போராட்டத்திற்கு பாஜக அரசு பணிந்துள்ள நிலையில் இதனை மக்களின் சாதனையாக தான் பார்க்கிறேன். இதை வைத்து நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. நான் சட்டசபையில் சுரங்கம் வந்துவிட்டால் என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிய போது அமைச்சர்கள் ஏன் இப்படி கூறுகிறீர்கள் என்று கேட்டனர். அப்போது எனக்கு மக்கள்தான் முக்கியம் பதவி முக்கியமில்லை என்ற சொன்னேன். மேலும் எனக்கு எப்போதுமே பதவி முக்கியம் கிடையாது, மக்கள்தான் முக்கியம் என்று கூறினார்.