தர்மபுரி மாவட்டம் சாவடியூர் பகுதியில் மோகன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு லாரி ஓட்டுனராக வேலை பார்க்கும் ரகு (35) என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி தீபா என்ற மனைவியும், குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் தம்பிக்கு திருமணமான நிலையில் அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் தினசரி இரவில் மது குடிக்கும் நிலையில் நேற்று முன்தினமும் அவர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது மோகன் தன் தம்பியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ஆசையாக  கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தம்பி அண்ணன் என்றும் பாராமல் அவரை அரிவாளால் வெட்டி கொன்றார். அதன் பிறகு அவருடைய உடலை அருகில் இருந்த ஒரு குப்பைமேட்டில் புதைத்து விட்டு தன் மனைவியிடம் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி உடனடியாக காரிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மோகனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ரகுவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.