வேலைவாய்ப்பு உலகம் இன்று நிச்சயமற்ற சூழ்நிலைகளால் சுழல்கிறது. இதில், அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான குவால்காமில் பணிபுரிந்து வந்த இந்தியரான ரோஷ்னி செல்லானியின் அனுபவம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.

இவர் சமீபத்தில் லிங்க்ட்இனில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “எனது திருமணத்துக்குப் பின் வெறும் 15 நாட்களில் குவால்காமிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். இப்போது நினைத்துப் பார்க்கையில், அதன் முன்னேற்பாடுகளான அறிகுறிகள் ஏற்கனவே இருந்தன” என்று கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு சந்தை கடுமையான நெருக்கடிகளை சந்தித்த வேளையில், இந்த திடீர் தாக்கம் அவருக்கு பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது.

ரோஷ்னி கூறுகையில், “நான் மூத்த RF சரிபார்ப்பு பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒருநாள் என் சக ஊழியர் ஒருவர்  ‘நாளைய பணிநீக்க பட்டியலில் உன்னுடைய பெயர் இருக்கிறது’ என்று கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன்.

அதுவே நடந்தது. நானும் என் கணவரும் திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கையை திட்டமிட்டு தொடங்கிய நேரத்தில் இந்த அதிர்ச்சி ஏற்படுவது மிகவும் வலியாயிருந்தது” எனக் கூறினார். மேலும், நிறுவனங்களுக்கு விசுவாசத்திற்கு மதிப்பில்லை என்றும், தங்களுக்கேற்ப மீதமுள்ள ஊழியர்களை நேர்முகமாக நேரம் பாராமல் நீக்கிவிடுவதாகவும் அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இந்த அனுபவம் பல வேலை தேடுபவர்களை தங்கள் நிலையை மீளாய்வு செய்ய வைக்கும் விதமாகியுள்ளது. ரோஷ்னி தனது பதிவு மூலம் பல முக்கியமான சமிக்ஞைகளை எச்சரிக்கையாகக் கூறியுள்ளார்.

அதிக வேலை திடீரென கொடுக்கப்படுதல், மேலாளரின் பழைய அணுகுமுறையிலிருந்து மாற்றம், ஒரே வேலைக்கு இருவரை நியமிப்பது, திட்டமில்லா HR கூட்டங்கள் போன்றவை பணிநீக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார். ரோஷ்னியின் பதிவு லிங்க்ட்இனில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டது.

அவருடைய அனுபவத்தை தங்களுடனான சம்பவங்களோடு ஒப்பிட்டு பலர் தங்கள் துயரங்களை பகிர்ந்தனர். இது, வேலைவாய்ப்பு உலகில் ஊழியர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.